#BREAKING || கணக்கு போட்ட ஈபிஎஸ் - முடித்து விட்ட முதல்வர் ஸ்டாலின் - செயற்குழு கூட்டத்தில் செய்கை

x

கொஞ்ச நாளா எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஒரு வாக்கு சதவீத கணக்க சொல்றார்! அம்மையார் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குல திருவாளர் குமாரசாமி போட்ட கணக்கையே மிஞ்சுற மாதிரி அது இருக்கு.

'காத்துல கணக்கு போட்டு கற்பனையில கோட்டை கட்டும்' பழனிசாமி - “கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தல்ல அதிமுக வாக்கு சதவீதம் 1 விழுக்காடு உயர்ந்திருக்கு”-னு உளறி இருக்கார். இல்லாததை இருப்பதுபோல ஊதிப்பெருக்கிக் காட்டுவது பழனிசாமிக்கு கைவந்த கலைதான்..

2019 நாடாளுமன்றத் தேர்தல்ல 20 தொகுதிகள்ல போட்டியிட்ட அதிமுக 19.4 விழுக்காடு வாக்குகளை வாங்குச்சு. இதுவே 2024 நாடாளுமன்ற தேர்தல்ல34 தொகுதிகள்ல போட்டியிட்டும் வெறும் 20.4 விழுக்காடு வாக்குகளைத்தான் வாங்கியிருக்கு. 14 தொகுதிகள்ல அதிகமா போட்டியிட்ட அதிமுக நியாயமா பார்த்தா 32.98 விழுக்காடு வாக்குகளை 2024 தேர்தல்ல பெற்றிருக்கணும்.

ஆனா, அதைவிட 12.58 விழுக்காடு வாக்குகள் குறைவாதான் வாங்கியிருக்கு. எளிமையா சொன்னா, 2019-ல சராசரியா ஒரு தொகுதிக்கு 4.16 லட்சம் வாக்குகள் வாங்குன அதிமுக - 2024-ல வெறும் 2.61 லட்சம் வாக்குகள்தான் வாங்கியிருக்கு.

ஒவ்வொரு தொகுதிலயும் சராசரியா 1.5 லட்சம் வாக்குகளை இழந்திருக்கு எடப்பாடி தலைமையிலான அதிமுக. இப்படி, மக்களால் நிராகரிக்கப்பட்டு

ஓரங்கட்டப்பட்ட பழனிசாமி, அதிமுக தொண்டர்களுக்கு சாதாரண கூட்டல் வகுத்தல் கணக்கே தெரியாதுனு நம்பி பொய்க்கணக்கை அவிழ்த்துவிட்டிருக்கார்.

அவர் சொன்ன கணக்கை அடிப்படை அறிவுள்ள அ.தி.மு.க. காரங்களே நம்ப மாட்டாங்க!

கோழைச்சாமியான பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிரா பா.ஜ.க.வ கண்டிச்சாரா?

புரட்சியாளர் அம்பேத்கரை கொச்சைப்படுத்துன

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரா கீச்சுக்குரலிலாவது கத்துனாரா?


Next Story

மேலும் செய்திகள்