"3 புதிய சட்டங்கள் வரும் 1-ம் தேதி அமலுக்கு வர உள்ளது" - மத்திய அமைச்சர் எல் முருகன் தகவல்

x

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில், குற்றவியல் நீதி அமைப்பு நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கு பாதை என்ற தலைப்பில், மாநாடு நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் எல் முருகன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்திய நீதித்துறை சட்டம், இந்திய குடிமை பாதுகாப்பு சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகியவை வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவித்தார். குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு, குறைந்த கால அளவில் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே இந்த புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். ஏழை, எளிய மக்கள் நியாயம் கிடைக்காமல் சிரமப்படும் நிலைக்கு இந்த சட்டங்கள் முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் நடந்துள்ள ஒரு சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும், அவர்களுக்கு உடனடியாக நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற சட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்