"வாங்க.. சென்னைய அதிரவிடுவோம்" - அன்புமணி ஆக்ரோஷ அழைப்பு.. - ராமதாஸ் ஆவேசம்

x

பாமக சார்பில் திருவண்ணாமலையில் செங்கம் சாலை அத்தியந்தல் பகுதியில் தமிழ்நாடு உழவர் பேரியக்க இயக்க மாநில மாநாடு நடைபெற்றது. இதற்காக, மாநாட்டு பந்தலுக்கு வரும் சாலைகளின் இரு புறங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு பேனர்கள், கொடிகள் அமைத்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமகவினர், உழவர் பேரியக்க இயக்கத்தினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் விவசாயிகள் குவிந்து போராட்டம் நடத்துவது போன்று, சென்னையிலும் தமிழ்நாடு விவசாயிகள் ஒற்றுமையாக போராட்டம் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். அப்போதுதான் டெல்லியில் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்வது போன்று, தமிழ்நாடு அரசும் ஏற்றுக் கொள்ளும் என்று போராட வருமாறு அழைப்பு விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்