பணி மூப்பு அடிப்படையிலான பட்டியல் வந்தவுடன்... அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்

x

பணி மூப்பு அடிப்படையிலான பட்டியல் வந்தவுடன் தலைமை ஆசிரியர் பணி நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், உரிய பட்டியல் வந்த பிறகு பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார். பகுதி நேர ஆசிரியர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவர் எனவும் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்