அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மனு...பிப்-2ம் தேதி உச்சநீதிமன்றம்

x

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு எதிராக அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் பிப்ரவரி 2ம் தேதி விசாரிக்க உள்ளது... கடந்த ஆகஸ்ட் மாதம் தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செய்து, பிப்ரவரி 5ம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என கடந்த 8ம் தேதி தெரிவித்திருந்தது... இதற்கு இடைக்கால தடை கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை சார்பில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த ரிட் மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமார் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை மறுதினம் விசாரிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்