CM தொகுதியிலே சட்டையை கிழித்து மக்கள் கொலை வெறி தாக்குதல்.. தெறித்து ஓடிய தெலங்கானா கலெக்டர்
CM தொகுதியிலே சட்டையை கிழித்து மக்கள் கொலை வெறி தாக்குதல்.. உயிர் இருந்தா போதும்னு ஓடிய கலெக்டர்.. அக்கட
தேசத்தில் அதிர்ச்சி
தெலங்கானாவில், அம்மாநில முதல்வரின் தொகுதியில் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..
சினிமாவை மிஞ்சும் வகையில், மக்களின் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாகி... தப்பித்தோம், பிழைத்தோம் என அதிகாரிகள் ஓடி இருக்கும் சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறி இருக்கிறது...
இத்தனைக்கும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் தொகுதியில்தான் இந்த சம்பவம்..
மக்களின் தாக்குதலுக்கு ஆளானவர்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசின் உயர் நிலை அதிகாரிகள் என்ற நிலையில், மக்களின் இந்த ஆத்திரத்திற்கும், கோபத்திற்கும் காரணம் என்ன?
ரேவந்த் ரெட்டி தொகுதியான தெலங்கானாவின் கொடங்கல் தொகுதியில் உள்ள கிராமத்தில், மருந்து தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது..
இதன் எதிரொலியாய்... நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி, மக்களின் கருத்துகளைக் கேட்க வந்த மாவட்ட ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்குதான் இந்த நிலைமை...
திட்டத்திற்கும் நிலம் கையகபடுத்தலுக்கும் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிகாரிகளை திரும்பி செல்லுமாறு கோஷங்களை எழுப்பி இருக்கின்றனர்...
ஒரு கட்டத்தில் வன்முறையை கையிலெடுத்து கலவரத்தில் முடிய, இதில் தாசில்தார் ஒருவர் சிக்கி கடும் தாக்குதலுக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பகுதி முழுவதும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், மறுபக்கம் அதிகாரிகளை தாக்கியவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்கும் படி விகாராபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தது அசாதாரண நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.