TAX | Nirmala Sitharaman வரி செலுத்துவோருக்கு ஷாக் கொடுத்த தகவல் - வந்த புது சிக்கல்?

x

வரி செலுத்துவோரின் தனியுரிமையை மீறும் வகையில் இருப்பதாக புதிய வருமான வரி மசோதா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மின்னஞ்சல்கள், கடவுச் சொல்கள், சமூக வலைதள கணக்குகள் ஆகியவற்றை வருமான வரித்துறை எப்போது வேண்டுமானாலும் ஆராய அதிகாரமளிப்பதால் வரி செலுத்துவோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட வருமான வரி மசோதா - 2025 ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.

இது சட்டமாக மாறுவதற்கு முன்பு, ஒரு தேர்வுக் குழு அதை மதிப்பாய்வு செய்யவுள்ளது. இந்த நிலையில், வரி செலுத்துவோரின் இ மெயில் முகவரிகள் முதல் சமூக வலைதள பக்கங்கள் வரை

அனைத்தையும் அணுக வருமான வரித்துறைக்கு அதிகாரம் அளிக்கும் புதிய பிரிவு இடம்பெற்றிருப்பது பிரைவசியை பாதிக்கும் என்ற சர்ச்சை வெடித்துள்ளது.

மடிக்கணினிகள், ஹார்டு டிரைவ்கள் மற்றும் மின்னஞ்சல்கள் பற்றிய விவரங்களை தற்போது வரி அதிகாரிகள் தேவையெனில் கேட்கலாம். ஆனால் நடைமுறையில் உள்ள முந்தைய வரிச் சட்டம் டிஜிட்டல் பதிவுகளை வெளிப்படையாகக் குறிப்பிடாததால், அத்தகைய கோரிக்கைகள் பெரும்பாலும் சட்டரீதியான பின்னடைவைச் சந்திக்கின்றன.

இருப்பினும், புதிய மசோதாவில், வரி அதிகாரிகள் டிஜிட்டல் தரவுகளை வேண்டும் என்று கோரினால், அதை வரி செலுத்துவோர்

தந்தே ஆக வேண்டும். மறுத்தால் கடவுச்சொற்கள், பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி கோப்புகளைத் திறக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய வருமான வரி மசோதாவின் பிரிவு 247 இன் படி, வரி ஏய்ப்பு

புகார் அல்லது வரி செலுத்தப்படாத சொத்துக்கள் இருப்பதாக வருமான வரி அதிகாரிகள் சந்தேகித்தால், ஏப்ரல் 1, 2026 முதல்

சம்பந்தப்பட்டவரின் மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள், வங்கி விவரங்கள் மற்றும் முதலீட்டு கணக்குகளை அணுக உரிமை பெறுவார்கள்.

எந்தவொரு கதவு, பெட்டி, லாக்கர், பாதுகாப்புப் பெட்டகம், அலமாரி ஆகியவற்றின் பூட்டை உடைத்துத் திறக்கவும், சாவிகள் கிடைக்காத எந்தவொரு கட்டிடம், இடம் போன்றவற்றில் நுழைந்து தேடவும், அல்லது எந்தவொரு கணினி அமைப்பு அல்லது மெய்நிகர் டிஜிட்டல் இடத்தினை அணுகவும் வருமான வரித்துறைக்கு அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், வரி செலுத்துவோரின் "மெய்நிகர் டிஜிட்டல் இடத்தில்" சேமிக்கப்படும் எதையும் அதிகாரிகள் சுதந்திரமாகப் பயன்படுத்த முடியும்.

ஆனால், இந்த புதிய அதிகாரங்கள் வரி செலுத்துவோரை அச்சுறுத்துவதற்கும், பிரைவசியை மீறி தனிப்பட்ட தரவுகளின் தேவையற்ற ஆய்வுக்கும் வழிவகுக்கும் என்று சட்ட வல்லுனர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்