#JUSTIN | ஆபாச மெசேஜ் அனுப்பிய மன்மதன்.. ஸ்பாட்டுக்கே சென்று தட்டி தூக்கிய பாஜக பெண் நிர்வாகி..

#JUSTIN | ஆபாச மெசேஜ் அனுப்பிய மன்மதன்.. ஸ்பாட்டுக்கே சென்று தட்டி தூக்கிய பாஜக பெண் நிர்வாகி..

பாரதிய ஜனதா கட்சியின் திறன் மற்றும் விளையாட்டுபிரிவு செயலாளராக பணியாற்றி வருபவர் ஆலிசா அப்துல்லா.

இவரை மர்மநபர் ஒருவர் ஓட்டல் ஒன்றிலிருந்துதொடர்பு கொண்டு தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறும் மசாஜ் செய்ய வருமாறும் வற்புறுத்தி மொபைல் போனில் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்ததாக தெரிகிறது

இதில் ஆத்திரமடைந்த அலிசா அப்துல்லா இது குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார் ஆனால் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதை அடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கே சென்று தகவல் அனுப்பிய நபரை காரில் ஏற்றிக்கொண்டு போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.

பின்னர் இது இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் X தளத்தில் டேக் செய்தும் இணைத்துள்ளார்.

என்னைப் போன்ற பதவியில் உள்ள ஒருவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களுக்கு எவ்வளவு சிரமங்களையும் சுதந்திரமற்ற நிலையும் ஏற்படுகிறது .

அசவுகரியங்கள் உருவாகிறது போலீஸ் பாதுகாப்பற்ற ஒரு நிலையும் உருவாகிறது. போதையில்இருக்கும் அந்த நபரால் என் போன்ற பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் எனவே போதையற்ற ஒரு நிலை உருவாக வேண்டும் பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று உருக்கமாக X தளத்தில் பதிவிட்டு இது பற்றிய வீடியோக்களையும் இணைத்துள்ளார்.

இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்