ராணுவத்தையே தடுத்து நிறுத்திய கோவை பெண்கள்? - என்ன நடந்தது..? பரபரப்பு

x

கோவை வாரப்பட்டியில் ராணுவ தளவாட தொழில்பேட்டை பகுதியில் அடிப்படை பணிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்திய நிலையில், அங்கு, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், சாலை மற்றும் அடிப்படை பணிகளை கடந்த புதன்கிழமை மேற்கொள்ள சிப்காட் அதிகாரிகள் சென்றனர். ஆனால், தங்களுக்குரிய பாதையை சிப்காட் நிர்வாகம் மறித்து சுற்றுச்சுவர் எழுப்ப முயல்வதாக குற்றம் சாட்டிய விவசாயிகள், பாதை விடும் வரை பணிகளை செய்யக்கூடாது என தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளிடம், விவசாயிகள் கோரிக்கை நியாயமானது என்று சூளூர் எம்எல்ஏ வி.பி. கந்தசாமி தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தால் தீர்வு கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறியதால், திங்கட்கிழமை ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக விவசாயிகள் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்