``2 நாளைக்கு முன் சமாதானம் பேச ஆள் அனுப்பிய சீமான்’’பூகம்பத்தை கிளப்பிய விஜயலட்சுமி வீடியோ

x

ஆதாரங்களில் அடிப்படையிலேயே சீமான் மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதாக நடிகை விஜயெலெட்சுமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நடந்தவற்றை பொதுவெளியில் பேசாமல் இருப்பதற்காக சீமான் தனக்கு பணம் தந்ததாகவும், அது தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சீமான் பொய்களை கூறி மக்களை ஏமாற்றி வருவதாகவும் விஜயலெட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறை வாய்ப்பளித்தால் சீமானிடம் நேருக்கு நேர் விவாதிக்க தான் தயாராக உள்ளதாகவும் விஜயலெட்சுமி கூறியுள்ளார். கடந்த 2 தினங்களுக்கு முன் தன்னிடம் சமாதானம் பேச வீட்டிற்கு சீமான் ஆள் அனுப்பியதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்