"சீமான் குறித்து 15 ஆடியோ லீக்" - தமிழகத்தை அதிரவைத்த திருச்சி சூர்யா
சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் திருச்சி சூர்யா மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், சீமான் குறித்து 15 ஆடியோக்களை தான் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருப்பதால், சீமான் மற்றும் துரைமுருகன் தன் மீது பழி வாங்கும் நோக்கோடு செயல்படுகிறார்கள் என கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது சாட்டை துரைமுருகன் தரப்பு தாக்கல் செய்த இடையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழக காவல்துறை தலைவர் மற்றும் திருச்சி காவல்துறை விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.
Next Story