சீமான், செங்கோட்டையன் ? நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக வந்த...

x

மத்திய நிதி அமைச்சர் என்ற முறையில் நிர்மலா சீதாராமனை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் ஸ்தாபன தினம் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் செங்கோட்டையன், சீமான் ஆகியோர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக பரவும் தகவல் குறித்து வி.பி.துரைசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, மத்திய நிதி அமைச்சர் என்ற முறையில் நிர்மலா சீதாராமனை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்... அதற்கான அதிகாரம் அவர்களுக்கு உண்டு என அவர் பதிலளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்