கட்சி தாவிய தொண்டர்கள்... சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த சரத்குமார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் சமத்துவ விருந்து நடைபெற்றது. இதில், நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான சரத்குமார் கலந்து கொண்டு, கேக் வெட்டி அனைத்து மதத்தினருக்கும் ஊட்டி மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 60 பேர், சரத்குமார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், நடிகர் அல்லு அர்ஜுன் விவகாரத்தில் அவர் வருவது தெரிந்து, போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி இருக்கலாம் என்று கூறினார்.
Next Story