நாதகவின் பிரதமர் வேட்பாளரை சொன்ன சீமான்.. இந்த ட்விஸ்ட்ட எதிர்பார்க்கலயே
சின்னமே இல்லாமல் 40 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்...
2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் 40 தொகுதியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை பல்லாவரம் அருகே நடைபெற்றது. 20 ஆண் வேட்பாளர்கள் 20 பெண் வேட்பாளர்கள் என 40 வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்து வைத்தார்... நாம் தமிழர் கட்சிக்குத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்த மைக் சின்னத்தை ஏற்க மறுத்து சின்னம் இல்லாமல் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்... முன்னதாக மேடையில் பேசிய சீமான், தான் களத்தில் இறக்கியுள்ள 40 பேரும் வேட்பாளர்கள் அல்ல புரட்சியாளர்கள் என்றும், தமிழ் தேசிய கோட்டையை கட்டி நிமிர்த்துபவர்கள் எனவும் பூரித்தார்... மேலும் பிரதமர் வேட்பாளரே தான் தான் என தெரிவித்த சீமான் பல துறைகளைச் சார்ந்த வேட்பாளர்களையும் மக்கள் நலனுக்காகக் களமிறக்குவதாகத் தெரிவித்தார். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா வீரப்பன் போட்டியிடும் நிலையில், விளவங்கோடு தொகுதியில் ஜெமினி என்கிற வேட்பாளரை நிறுத்தி உள்ளார் சீமான்... இவர் கன்னியாகுமரி பகுதியில் கொலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது...