சீமான் மீது பாய்ந்த வழக்கு.. | Seeman | NTK | Police | Karur | ThanthiTV

x

முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கரூர்,தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி கரூர் வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, சீமான் மீது அவதூறாக பேசுதல், இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசி இணையதளத்தில் வெளியிடுதல் ஆகிய இரண்டு சட்டப்பிரிவுகள் கீழ், தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்