“பா.ஜ.க. பி டீமா? - NIA ரெய்டில் ஒன்று நிரூபணம்“ - சீமான்
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து விடுதலையான சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரை, திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், திராவிடம் என்கிற கருத்தியல் இருந்தால்தான் அரசியல் செய்ய முடியும் என்கிற நிலை மாறி விட்டதாக தெரிவித்தார். மேலும் என்.ஐ.ஏ. சோதனையால், நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க. பி டீம் இல்லை என்பது நிரூபணமாகி விட்டதாகவும் தெரிவித்தார்.
Next Story