விமானத்தில் பறந்து வந்து முதல்வருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தஅரசு பள்ளி மாணவர்கள்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசு பள்ளியில் பயிலும் மலைகிராம மாணவர்கள், முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். தொட்ட கோம்பையில் உள்ள மலைவாழ் கிராம மக்களின் குழந்தைகள், கரும்பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில், முதல்வரின் பிறந்தநாளையொட்டி மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல முடிவெடுத்த திமுக நிர்வாகிகள் நல்லசிவம் மற்றும் சிவபாலன் ஆகியோர், 34 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களை சென்னை அழைத்து செல்ல ஏற்பாடு செய்தனர். அதன்படி, விமானம் மூலம் கோவையில் இருந்து சென்னைக்கு முதன்முதலாக பயணித்த மாணவர்கள், முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story