சவுக்கு சங்கர் வீடு விவகாரம் - கொந்தளித்த ஈபிஎஸ், அண்ணாமலை
சென்னையில் யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள் என கூறியுள்ள ஈபிஎஸ், இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம், அராஜகத்தின் வெளிப்பாடு என சாடியுள்ளார். இதன் பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Next Story