``அவர்கள் தான் செய்தார்களா? இல்லை அரசியல் காரணமா?’’

x

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாக கூறும் அமைச்சர் சேகர் பாபு தூக்கத்திலிருந்து எழ வேண்டும் என அவர் விமர்சித்துள்ளார். மேலும், யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்