RB உதயகுமார் மீது கொலைவெறி தாக்குதல்? - ஈபிஎஸ்க்கு வந்த பொல்லா கோபம்

x

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தென்மாவட்டங்களில் அதிமுகவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், சில சமூக விரோதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கொலை வெறி தாக்குதலுக்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிமுக எப்போதும் தொண்டர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்