`கைது'.. ராமதாஸ் ஆவேச அறிக்கை | Ramadoss | PMK

x

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை கைது செய்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 2012-ஆம் ஆண்டில் 5 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பணிஅமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு இதுவரை பணிநிரந்தரம் வழங்கப்படவில்லை என்றும், கடந்த 12 ஆண்டுகளில் அவர்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், 4 ஆண்டுகளாகியும் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்