ஆய்வுக்கு சென்ற அமைச்சர் ராஜ கண்ணப்பனை அதிர்ச்சியாக்கிய வார்த்தை
பால் உற்பத்தி செய்யும் விசாயிகளுக்கு எவ்வித கடனுதவியும் கிடைக்கவில்லை என பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் விவசாயிகள் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள சிங்களாந்தபுரத்தில் பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. அந்த நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பனை பால் உற்பத்தியாளர்கள் சந்தித்து பேசினர். அப்போது, பல ஆண்டுகளாக பால் ஊற்றி வரும் தங்களுக்கு கடனுதவி கிடைப்பதில்லை என்று ஆதங்கத்துடன் கூறினர். இதையெல்லாம் பால்வளத்துறை மேளாலரிடம் கேளுங்கள் என்று கூறி விட்டு அமைச்சர் சென்றுவிட்டார்.
Next Story