அரசியலில் கிளம்பிய பெரும் புயல்.. ஒரு போட்டோ.. சற்றும் எதிர்பார்க்காத பாஜக.. தேதி குறித்த காங். பொது செயலாளர்

x

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தேசிய அரசியலில் பேசு பொருளாகி வருகிறது...

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த, பாஜக தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியது தொடங்கி, நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில், 100 கிராம் உடல் எடை அதிகமாக இருந்ததாக மல்யுத்தத்தின் இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது வரை வினேஷ் போகத் பெரும் போராட்டங்களை சந்தித்திருந்தார்...

சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் சந்திப்பு இந்நிலையில், சக மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியாவுடன் சேர்ந்து, காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை சந்தித்திருக்கிறார் வினேஷ் போகத்...

மத்தியில் ஆளும் பாஜக அரசின் மீது மல்யுத்த வீரர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த சந்திப்பு தேசிய அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது...

இருவரும் அரியானாவை சேர்ந்தவர்கள் என்ற நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது...

காரணம், அரியானாவில் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது..

இந்நிலையில், ராகுல் காந்தியுடனான இந்த சந்திப்பின் மூலம் இருவரும் காங்கிரஸ் சார்பில் அரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது...

அரியானா சட்டமன்ற தேர்தல்-காங்கிரஸ் சார்பில் இருவரும் போட்டி?

வினேஷ் போகத் ஜூலானா தொகுதியிலும், பஜ்ரங் புனியா பட்லி தொகுதியிலும் போட்டியிடலாம் என்றும் சொல்லப்படுகிறது...

முதற்கட்டமாக 66 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டிருக்கும் நிலையில், அதில் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பஜ்ரங் புனியாவும், வினேஷ் போகத்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறக்கப்படுவார்களா என்பது வரும் வியாழக்கிழமைக்குள் தெரிய வரும் என கொளுத்திப் போட்டிருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தீபக் பபாரியா...

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கேசி.வேணுகோபாலை, பஜ்ரங் புனியாவும், வினேஷ் போகத்தும் சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்