ராகுலுக்கு மம்தா அனுப்பிய மெசேஜ் - பாஜக தலை மேல் தொங்கும் கத்தி - பதவியேற்பாரா மோடி?

x

மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க. பெரும்பான்மை பெற முடியாமல் போனதால், தார்மீக தோல்வியை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய, மம்தா பானர்ஜி தெரிவித்தார். பிரதமர் மோடி பல கட்சிகளை உடைத்ததாக குற்றம் சாட்டியுள்ள மம்தா பானர்ஜி , இப்போது மக்கள் பிரதமர் மோடியின் மன உறுதியை உடைத்துள்ளதாகவும் விமர்சித்தார். சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் தயவில் பிரதமர் மோடி ஆட்சி அமைக்கிறார் என்றும் மத்திய அமைப்புகளையும் பயன்படுத்தி மிரட்டும் பா.ஜ.க.வை நாங்கள் விட்டு வைக்க மாட்டோம் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.

பா.ஜ.க.வை இந்திய கூட்டணி கட்சிகள் மன்னிக்க மாட்டார்கள் என்றும், ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்து தாம் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்