#BREAKING || "மிகப்பெரிய பேரிடர்.." ராகுல் காந்தி வெளியிட்ட பரபரப்பு வீடியோ | Rahul Gandhi
நீட் வினாத்தாள் கசிவால் கோடி கணக்கான மாணவர்களின் கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல்காந்தி நீட் பிரச்சனையில் கோடிக்கணக்கான மாணவர்களின் கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீட் விவகாரத்தில் நடைபெற்றது மிகப்பெரிய பேரிடர்.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்து இருப்பதும் அதில் தொடர்புடையவர்கள் பல்லாயிரம் கோடி ஈட்டி இருப்பதும் அனைவருக்கும் நன்கு தெரியும்.
பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு படித்து மருத்துவத் துறையில் சேர வேண்டும் என்று நினைத்த மாணவர்களின் கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளது.
எனவே தான் நேற்று எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் நீட் விவகாரம் குறித்து ஒரு நாள் முழுவதும் தனி விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தேன் அதனை அனைத்து எதிர்கட்சிகளும் ஏற்றுக் கொண்டனர்.
இன்று நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சினையை பற்றி பேச முயன்ற ஆனால் நான் பேச அனுமதிக்கப்படவில்லை.
நீட் விவகாரத்தில் சுமார் 2 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏழு ஆண்டுகளில் 70 முறை பல்வேறு தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிந்துள்ளது.
இதில் அமைப்ப ரீதியான பிரச்சனை இருப்பதும் பெருமளவிலான ஊழல் நடைபெற்று இருப்பதும் தெள்ளத் தெளிவாகிறது.
இதனை இப்படியே தொடர அனுமதிக்க முடியாது.
கோடிக்கணக்கான மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெரும் வேதனையில் உள்ளனர்.
எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோதியே விவாதத்தை முன்னெடுத்து இருக்க வேண்டும். ஆனால் பிரதமர் அதனை செய்யாதது வருத்தமளிக்கிறது.
நாங்கள் அரசோடு சண்டை போட விரும்பவில்லை எங்களது கருத்துக்களையும் பார்வைகளையும் முன்வைக்க வேண்டும் என்பதையே விரும்புகிறோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நீட் விவகாரத்தில் தனி விவாதம் நடத்த வேண்டும் என இந்தியா கூட்டணி கோரிக்கை விடுக்கிறது ஆனால் அரசு குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் நீட் விவகாரம் குறித்து பேசுமாறு கூறுகிறது.
ராகுல் காந்தி