முதல்வர் முன்னிலையில் ஆளும் கட்சி எம்எல்ஏ வாக்குவாதம் - பிரதமர் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு
புதுச்சேரியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக பங்கேற்ற, பழங்குடியினர் கவுரவ தின நிகழ்ச்சிக்கு அழைக்காததை கண்டித்து, முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அமைச்சர் சாய் சரவணக்குமார் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் இயக்குநரை கடுமையாக திட்டினர். எந்தவொரு சட்டமன்ற உறுப்பினர்களையும் மதிப்பு இல்லை என்றும், அத்துறையில் மக்களுக்கான எந்தவொரு திட்டங்களும் சரிவர செயல்படுத்தபடுவது இல்லை என கடுமையாக சாடினார். இதனால் விழா அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story