பிரியங்கா காந்திக்கு அதிர்ச்சி கொடுத்த நவ்யா ஹரிதாஸ்

x

வயநாடு எம்பி பிரியங்கா காந்தியை தகுதி நீக்கம் செய்யக்கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜகவை சேர்ந்த நவ்யா ஹரிதாஸ் என்பவர், பிரியங்கா காந்திக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பிரியங்கா காந்தி தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில், தன்னுடைய சொத்துக்கள் குறித்தும், தனது குடும்பத்தின் சொத்துக்கள் குறித்தும் தவறான தகவல்களை வழங்கி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும், ஊழல் குற்றச்சாட்டுக்கு சமமானது என்றும் கூறியுள்ளார். எனவே பிரியங்கா காந்தியின் வெற்றியை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார். கேரள உயர் நீதிமன்றத்திற்கு வரும் 23ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை விடுமுறை நாட்கள் என்பதால், இந்த வழக்கு ஜனவரியில் விசாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்