தென்னிந்தியா வளர்ச்சியில் ஒரு மைல் கல்.. 3 முக்கிய திட்டங்களை தொடங்கிய பிரதமர்

x

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் 4000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தென்னிந்தியாவின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கொச்சியில் 3 முக்கிய திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தபின் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த வளர்ச்சித் திட்டங்களால் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்தார். உலக வர்த்தகத்தில் இந்தியாவும் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், நாட்டின் துறைமுகத் துறையை வல்லரசாக மாற்றுவதே இலக்கு என்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், நாடு கப்பல் துறையில் பெரும் சாதனை படைத்துள்ளதாகவும், சரக்கு கப்பல்கள் இனி துறைமுகத்தில் காத்திருக்க வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டார். கப்பல் பழுதுபார்க்கும் முக்கிய மையமாக நாடு மாறி வருவதாகவும், கப்பல் பராமரிப்புக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதையும் புதிய திட்டங்கள் மாற்றும் என்றும் மோடி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்