"லட்சத்தீவுக்கு சென்று போட்டோசூட் எடுக்கும் பிரதமர்".. மல்லிகார்ஜுன கார்கேவின் விமர்சனம்

x

மத்திய அரசு இயற்றிய புதிய தொழிலாளர் சட்டங்கள் மற்றும் குற்றவியல் சட்டங்கள், சர்வாதிகாரத்தின் அடையாளங்கள் என விமர்சித்தார். எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்த அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளை பா.ஜ.க தவறாக பயன்படுத்துவதாக தெரிவித்தார். மணிப்பூரில் துரதிஷ்டவசமான சம்பவங்கள் நடைபெற்றபோது அங்கே செல்லாத பிரதமர் மோடி, நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்று போட்டோசூட் எடுப்பதிலேயே மும்முரமாக இருப்பதாக குற்றம் சாட்டினார். ராமர்கோயில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ் தங்களுக்கு கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட கார்கே, அதில் பங்கேற்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் 500 தொகுதிகளுக்கான காங்கிரஸ் மேற்பார்வையாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும் மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்