பொன்முடி சர்ச்சை பேச்சு - சட்ட நடவடிக்கைக்கு தயாரான பாஜக

x

பெண்கள் குறித்த சர்ச்சையாக பேசிய பொன்முடிக்கு எதிராக FIR பதிந்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். வழக்கறிஞர் G.S. மணி என்பவர் சென்னை காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாநில மகளிர் ஆணையம் உள்ளிட்டவைக்கும் இதுகுறித்த தனது புகார் மனுவை அனுப்பியுள்ளார். அதில், பொன்முடி பதவி அதிகாரத்தால் பெண்களை தொடர்ந்து அவதூறாகவும், அருவருக்கதக்க முறையிலும் பேசுவதாக குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறை பொன்முடி மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து, FIR பதிவு செய்து தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்