அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகளுக்கு.. பேச்சுவார்த்தைக்கு சென்ற இடத்தில் அதிர்ச்சி
விழுப்புரம் மாவட்டம் இருருவேல்பட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தைக்கு சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்து பொதுமக்கள் எதிர்ப்பு
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுக்கா அரசூர் பகுதியில் ஐந்து ஊருக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். ஃபெஞ்சல் புயலால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு அடைந்ததாகவும் இதனால் அரசூர் இருவேல்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இருவேல்பட்டு விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் இருபுரமும் 10 கிலோமீட்டர் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது
அரசூர் திருவெண்ணைநல்லூர் காரப்பட்டு இருவேல்பட்டு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு என கூறி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி மற்றும் தெற்கு மாவட்ட செயலர் கௌதம சிகாமணி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற நிலையில் இருவேல்பட்டுப் பகுதியில் அமைச்சர் பொன்முடி பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை வந்து பார்வையிடாமல் காருக்குள் அமர்ந்து பேசியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சேரை வாரி அமைச்சர் பொன்முடி மீதும் கலெக்டர் வீசினர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மீண்டும் விழுப்புரம் திரும்பினார்.