அரியானா அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் ஜாட் சமூகம்
பீரித்.. வினேஷ் போகத், பஜ்ரங் புனியா காங்கிரசில் இணைந்த காட்சி...
வழிமேல்.... விழி வைத்து காத்திருந்த காங்கிரசுக்கு புதிய நம்பிக்கையாக அமைந்திருக்கிறது வினேஷ் போகத், பஜ்ரங் புனியா வருகை...
அரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக அரசுக்கான எதிர்ப்பலை காங்கிரசுக்கு சாதகமாக பார்க்கப்பட்டாலும், வாக்குகள் பிரிவதை தடுக்க வேண்டிய கட்டாயமும் அக்கட்சி முன்பாக இருக்கிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளில் 5 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. இதில் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் ஜாட் மக்கள் வாக்கு முக்கிய பங்கு வகித்தது. மத்தியில் பாஜகவின் பெரும்பான்மை நோக்கிய பயணத்திற்கு தடை போட்டதில் அரியானா, ராஜஸ்தான் ஜாட் சமூக வாக்கு முங்கிய பங்கு வகித்தது.
அரியானாவில் 33 சதவீதமுள்ள ஜாட் சமூக வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது. மாநிலத்தில் 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 36 தொகுதிகளில் ஜாட் மக்கள் கணிசமாக செல்வாக்கு கொண்டிருக்கிறார்கள். ஜாட் மக்கள் விவசாயம் செய்பவர்களாக இருக்கிறார்கள். விவசாய விளைப்பொருட்களுக்கு சட்டப்பூர்வமான குறைந்தப்பட்ச ஆதார விலை கோரி போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களது கோபம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பங்கமாக அமைந்தது.
மாநிலத்தில் பாஜக ஒபிசி வாக்குகளை குறிவைப்பதால், தேர்தல் களம் ஜாட் 'வெர்சஸ்' ஜாட் அல்லாதோர் என்று மாறி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டாலும், ஜாட் வாக்குகளை பாஜக குறி வைக்காமல் இல்லை. ஆம்.. மாநிலத்தில் அனைத்து பயிர்களும் குறைந்தபட்ச ஆதர விலையில் கொள்முதல் செய்யப்படும் என முதல்வர் நியாப் சிங் சைனி அரசு அறிவித்தது.
இதற்கிடையே ஜாட் சமூகத்தை சேர்ந்த துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியும் இருப்பை தக்க வைக்க போராடுகிறது. இந்த சூழலில் ஜாட் வாக்குகளை தன் பக்கம் இழுக்க காங்கிரஸ் மெனக்கெடுகிறது.
இப்போது காங்கிரஸில் இணைந்திருக்கும் வினேஷ் போகத்தும், பஜ்ரங் புனியாயும் ஜாட் சமூகத்தை சார்ந்தவர்களே... இதில் ஜாட் வாக்குகளை ஒருங்கிணைப்பதை தவிர்த்து, பெண்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஆதரவு தளத்தை விரிவாக்க காங்கிரஸ் காய் நகர்த்துகிறது. பாஜகவுக்கு கவலையளிக்கும் வகையில் வினேஷ் போகத் அரியானா - பஞ்சாப் எல்லையில் போராடும் விவசாயிகளை சந்தித்து ஆதரவையும் தெரிவித்து இருக்கிறார்.
விளையாட்டு வீராங்கனையாக இருந்தபோதே ஆட்சி அதிகாரத்தை வந்துபார் என்று சமர் செய்தவர் வினேஷ் போகத். ஆம்... பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக நிர்வாகியுமான பிரிஜ் பூஷணுக்கு எதிரான போராட்டத்தில் சாலையில் இறங்கியவர்.
பெரும் போராட்டத்தை கடந்து பாரீஸ் சென்றவர் 100 கிராம் எடை கூடியதால் பதக்க வாய்ப்பை நழுவவிட்டார். இந்த இரு சம்பங்களிலும் பாஜகவுக்கு எதிராக களத்தில் போராடியது காங்கிரஸ்.
இப்போதும்... விளையாட்டு வீரர்களை கணிசமாக கொண்ட மாநிலத்தில் பிரிஜ் பூஷண், ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை வைத்து பாஜகவை கார்னர் செய்ய காங்கிரசுக்கு கிடைத்த பலமான வாய்ப்பாகவே வினேஷ் போகத் அரசியல் எண்ட்ரி பார்க்கப்படுகிறது.
அரியானாவில் ஆதிக்கம் செலுத்தும் ஜாட் வாக்கு
அரியானாவில் நாடாளுமன்றத் தேர்தலில்
10-ல் 5 தொகுதியை காங்கிரஸ் வென்றது
மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தும்
ஜாட் மக்கள் வாக்கு
மத்தியில் பாஜகவின் பெரும்பான்மை
நோக்கிய பயணத்திற்கு அரியானா,
ராஜஸ்தானில் தடை போட்ட சமூக வாக்கு
அரியானாவில் 33% ஜாட் வாக்குகள்,
எந்த தேர்தலின் முடிவிலும் முக்கிய பங்கு
90 சட்டப்பேரவை தொகுதிகளில்
36 தொகுதிகளில் ஜாட் மக்கள்
கணிசமாக செல்வாக்கு
விவசாய விளைப்பொருட்களுக்கு
சட்டப்பூர்வமான குறைந்தப்பட்ச
ஆதார விலை கோரி போராட்டம்
ஜாட் மக்கள் பெரும்பாலும் விவசாயம்
செய்கிறார்கள், விவசாயிகள் கோபம்
பாஜகவுக்கு எதிராக அமைந்தது