ஹிந்தி தன்னுடைய தாய் மொழி இல்லை... பாட்காஸ்ட் நிகழ்வில் பிரதமர் மோடி ஓபன் டாக்
முதல்முறையாக podcast நேர்காணலில் பேசி உள்ள பிரதமர் மோடி, தனது அரசியலின் ஆரம்ப காலகட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தான் தமக்கு சைவ உணவுகளை ஆர்டர் செய்வார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வாத்நகரில் தனது ஆரம்பகால வாழ்க்கை குறித்து பேசிய பிரதமர் மோடி, தாம் ஒரு சராசரி மாணவனாக இருந்ததாகவும், பள்ளி படிக்கும்போது எந்த போட்டி நடைபெற்றாலும் அதில் கலந்து கொள்ளாமல் ஓடி விடுவேன் என்றும் தனது பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்துள்ளார். மேலும், குளத்திற்கு செல்ல தமக்கு அனுமதி கிடைக்கும் என்பதற்காக வீட்டில் உள்ள அனைவரின் துணிகளையும் சிறுவயதில் தாம் எடுத்துச் சென்று துவைத்ததாகவும்,
ஹிந்தி தன்னுடைய தாய் மொழி இல்லை என்ற போதிலும், இந்தி கற்றால் அதிகமான மக்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் தாம் ஹிந்தி கற்றுக் கொண்டதாகவும் பிரதமர் மோடி அந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.