"இந்திய அரசியலமைப்பு சட்டத்தை.." - மோடி பரபரப்பு குற்றச்சாட்டு
எமர்ஜென்சி அமல்படுத்தியவர்களுக்கு இந்திய அரசியல் சாசனத்தின் மீது அன்பு இருப்பதுபோல் பாசாங்கு செய்வதற்கு, எந்த உரிமையும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.1975 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்தியதன் 50-வது ஆண்டு அனுசரிக்கப்படுகிறது.இதையொட்டி கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, எமர்ஜென்சியை எதிர்த்த அனைத்து மாமனிதர்களுக்கும், பெண்களுக்கும் மரியாதை செலுத்தும் நாள் இன்று என குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு இந்தியனும் பெரிதும் மதிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காங்கிரஸ் கட்சி எப்படி அடியோடு நசுக்கியது, அடிப்படைச் சுதந்திரத்தை எப்படி குலைத்தது என்பதை, எமர்ஜென்சியின் இருண்ட நாட்கள் நமக்கு நினைவூட்டுவதாகத் தெரிவித்துள்ளார். ஆட்சியை பிடிக்க, அப்போதைய காங்கிரஸ் அரசு, ஒவ்வொரு ஜனநாயகக் கொள்கையையும் புறக்கணித்து, தேசத்தை சிறைச்சாலை ஆக்கியதாக குற்றம்சாட்டியுள்ள பிரதமர் மோடி,காங்கிரஸுடன் உடன்படாத எந்தவொரு நபரும் சித்திரவதை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும், நலிந்த பிரிவினரை குறிவைத்து சமூக ரீதியாக பிற்போக்குத்தனமான கொள்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.