"அது தமிழக தேர்தலுக்கு முன்பு இது தமிழக தேர்தலுக்கு பின்பு.. தமிழர்கள் மீது இத்தனை வெறுப்பு ஏன்?"

x

அது தமிழக தேர்தலுக்கு முன்பு.. இது தமிழக தேர்தலுக்கு பின்பு.. தமிழர்கள் மீது இத்தனை வெறுப்பு ஏன்?" மோடி விட்ட வார்த்தையால் வெடிக்கும் சர்ச்சை

தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பிரதமர் மோடி அவமதிக்கிறார் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்திருக்கும் விவகாரத்தில் நடப்பது என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

வடமாநிலங்களில் பிரசாரம் தீவிரமாக... தென்னிந்தியாவில் இருப்பவர்கள் உ.பி. மக்களை இழிவாக பேசுகின்றனர், இதை மறக்கவோ, மன்னிக்கவோ கூடாது என உத்தரபிரதேச பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியது சர்ச்சையானது.

இதனையடுத்து பாஜக பிரசார வியூகத்தை வடக்கு Vs தெற்கு என மாற்றுகிறதா...? என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுந்தது.

பெண்களுக்கான இலவச பேருந்து திட்டங்களை விமர்சித்த பிரதமர் மோடி, இப்படி செய்தால் மெட்ரோ திட்டம் எப்படி வெற்றியடையும்? இதனால் மாநிலங்கள் நிதி நெருக்கடியில் சிக்குகின்றன என்றார்.

இதற்கு பிரதமர் என்பதையே மறந்து மாநிலங்களுக்கு இடையே மோதலையும், வெறுப்பையும் தூண்ட செய்யும் அரசியலையே மோடி செய்கிறார் என பதிலடி கொடுத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்....

இந்த சூழலில் ஒடிசாவில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, காணாமல் போன பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவி தமிழகத்திற்கு சென்றுவிட்டது என கூறியிருக்கிறார். தமிழகத்திற்கு சாவியை அனுப்பியவர்களை மன்னிக்கலாமா...? எனவும் கூட்டத்தை நோக்கி கேள்வியை எழுப்பினார்.

ஒடிசாவில் முதல்வர் நவீன் பாட்நாயக்கின் தளபதியாக, பிஜு ஜனதா தளத்திற்கு பிரசாரம் செய்யும் மதுரையை சேர்ந்த வி.கே. பாண்டியனை மோடி மறைமுகமாக தாக்கியது தெரியவந்தது.

இந்த சூழலில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆலயத்தின் பொக்கிஷத்தை களவாடும் திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா? என கேள்வியை எழுப்பியிருக்கும் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா? தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்? என கேள்வி கணைகளை தொடுத்திருக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாக போற்றுவது, தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்றும் பாராட்டுவது.. இதுவே ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசாவில் வாக்கு சேரிக்கும்போது தமிழ்நாட்டு மக்களை திருடர்களை போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும்... அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம் என மோடியை சாடியிருக்கிறார் ஸ்டாலின்...

இதை மக்கள் புரிந்து கொள்வார்கள் எனவும், வாக்குக்காக தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதை பிரதமர் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் தமிழ் மொழியில் பேசியும், தமிழர்களை பாராட்டியும் பிரசாரம் செய்தார் பிரதமர் மோடி... இங்கு பிரசாரம் முடிந்ததும் அவரது பேச்சுக்களை பார்ப்போர்.. அது தமிழக தேர்தலுக்கு முன்பு... இது தமிழக தேர்தலுக்கு பின்பு என விமர்சித்து வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்