நாளை கிறிஸ்துமஸ் - இந்தியாவிலே முதல்முறையாக வேறெந்த பிரதமரும் செய்யாததை செய்த மோடி
டெல்லியில் உள்ள சிபிசிஐ மைய வளாகத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை நடத்தும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோதி கலந்து கொண்டார்.
இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்ற நிலையில், நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது இந்தியக் குழந்தைகள் உலகில் எங்கிருந்தாலும் எந்தச் சிக்கலில் இருந்தாலும் ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றுவதைக் கடமையாக இன்றைய இந்தியா கருதுவதாக தெரிவித்தார். மேலும், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் தேசிய நலனுடன் மனித நலனுக்கும் முன்னுரிமை அளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
Next Story