"ஆந்திராவை மாற்ற விருப்பம்" - பிரதமர் மோடி | Pm Modi

x

ஆந்திராவை புதிய கால நகரமயமாக்கலுக்கு உதாரணமாக மாற்ற விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விசாகப்பட்டினம் அருகே புடிமடகாவில் அதிநவீன என்டிபிசி கிரீன் எனர்ஜி லிமிடெட் பசுமை ஹைட்ரஜன் மைய திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார். மேலும், திருப்பதி மாவட்டத்தில் சென்னை- பெங்களூரு தொழில் வழித்தடத்தின் கீழ் கிருஷ்ணபட்டினம் தொழில் பகுதிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஆந்திர மாநிலம் அதன் புதுமையான உணர்வின் காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான முக்கிய மையமாக திகழ்வதாக தெரிவித்தார். 2047 ஆம் ஆண்டுக்குள் ஆந்திர மாநிலத்தை 2.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு வைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், சந்திரபாபு நாயுடுவின் அரசு இந்த தொலைநோக்குப் பார்வையை அடைய ஸ்வர்ண ஆந்திரா 2047 ஐத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்