போலீசாருடன் பாமகவினர் தள்ளுமுள்ளு..! விழுப்புரத்தில் பரபரப்பு | PMK
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்க கோரி விழுப்புரம் நகராட்சி திடல் பகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டிருந்த பாமகவினர், வாகனங்களை திருப்பிவிடாதது ஏன்? என்று போலீசாருடன் வாக்குவாதம் நடத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு வந்த ராமதாஸ் ஆட்சியர் அலுவலகத்தில் வாகனத்தில் இருந்தவாறு ஓய்வெடுத்த போது, போலீசார் ஆட்சியர் அலுவலக கேட்டை அடைத்தனர். அங்கும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாமகவினர், ஆத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதோடு, உதயநிதி ஸ்டாலின் பேனரை கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அவர்களை கலைந்து செல்ல செய்தனர்.
Next Story