``உங்க வீட்டுல ஆம்பளைங்களே இல்லையா?’’ - பாமக MLA விட்ட வார்த்தை.. விவகாரத்தில் மீண்டும் மோதல்

x

முத்துநாயக்கன்பட்டி கால்நடை மருத்துவமனை எதிரே, அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினர் இடையே தொடர்ந்து பிரச்சனை நிலவி வந்தது. சமரசம் பேச முயன்ற பாமக எம்.எல்.ஏ., பெண்களை பார்த்து, “உங்கள் வீட்டில் ஆம்பளைங்களே இல்லையா“ என்று கேட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இரு தரப்பினர் இடையே உடன்பாடு எட்டாததால், கோயிலுக்கு சீலும் வைக்கப்பட்டிருந்தது. இந்த சீலை, செல்லப்பிள்ளைகுட்டை விஏஓ, நேற்று அகற்றினார். அப்போது அங்கு வந்த இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு, லேசான கைகலப்பிலும் இறங்கினர். தற்போது கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்