``டிச. 28..'' அன்புமணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | PMK | Anbumani

x

வரும் 28-ம் தேதி பா.ம.க புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுவையில் நடைபெறும் என, கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவை நாவற்குளம் நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் 28ம் தேதி காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். கட்சி நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில், தனது தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், 2024-ம் ஆண்டில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவதோடு, 2025-ம் ஆண்டில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முடிவுகள் எடுக்கப்படும் என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்