``அசம்பாவிதம் நடந்தும் பொறுப்பே இல்லையா?’’ - போலீசார்களை பார்த்து சரமாரியாக திட்டிய பவன்

x

திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்தில் காயமடைந்தவர்களை சந்திக்க துணை முதல்வர் பவன் கல்யாண் வந்தபோது பொதுமக்கள் குவிந்ததால் போ​லீசாரை அவர் கடிந்து கொண்டார். திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி டோக்கன்கள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை காண, துணை முதல்வர் பவன் கல்யாண் வந்தபோது பொதுமக்கள் குவிந்தனர். இதனால் ஆவேசமடைந்த பவன் கல்யாண், பெரிய அசம்பாவிதத்திற்கு பின்னரும் அதிகாரிகளுக்கு பொறுப்பு வரவில்லை என்று கடிந்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்