தமிழக அரசியலை தீவிரமாக உற்றுநோக்கும் பவன்... MGR நினைவுநாளில் சொன்ன விஷயம்..!
எம்ஜிஆரின் நினைவு நாளை ஒட்டி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள பதிவில், தொலைநோக்கு பார்வையோடு தமிழக மக்களின் நலனுக்கும் முன்னேற்றத்திற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த புனிதர் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்சென்று, மத்திய அரசுடன் சுமூகமான நல்லுறவைப் பேணி, மாநிலத்தின் நலன்களை எப்போதும் பாதுகாக்கும் நுட்பமான அணுகுமுறை கொண்டவர் எம்ஜிஆர் என்றும் குறிப்பிட்டுள்ளார். எம்ஜிஆரின் அணுகுமுறை தங்கள் ஜனசேனா கட்சியின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்காகவே வாழ்ந்து, இன்னாளில் மறைந்த மகானுக்கு புகழஞ்சலியை உரித்தாக்குவதாக அந்த பதிவில் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
Next Story