``சீமான் எங்குமே நுழைய முடியாது..'' சுத்துப்போட்ட த.பெ.தி.க.வினர் சூளுரை...

x

பெரியார் குறித்து பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்தை முற்றுகையிட்டு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்தை முற்றுகையிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சீமானை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக, நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமானின் வீட்டில் குவிந்த அவரது தொண்டர்கள், கோஷம் எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்