வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் சந்ததிகள் சொன்ன பதிலை கேட்டு அதிர்ந்த தமிழகம்
சென்னை தலைமைச் செயலகத்தில், "வேர்களைத் தேடி" திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பலர் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது சந்ததிகளுக்கு தமிழ் கலாச்சாரத்தை பற்றி ஒன்றுமே தெரியாத நிலை, தமிழ் ஆர்வலர்கள் இடையே கவலையை அளித்து வந்தது. இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு, தமிழ் பாரம்பரியத்தை தெரியப்படுத்தும் வகையிலான, 'வேர்களைத்தேடி திட்டம்' தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டில், 15 நாடுகளை சேர்ந்த 100 இளைஞர்கள் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கான, பாரம்பரிய சுற்றுலாவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Next Story