நாகையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி பிளக்ஸ் பேனரில், எம்.எல்.ஏ. பெயர் தவிர்க்கப்பட்டதாக புகார் எழுந்தது.
நாகப்பட்டினத்தில் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு வாரியத் தலைவர்கள் கௌதமன், மதிவாணன், கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. நாகை மாலி, வி.சி.க. நாகை எம்.எல்.ஏ. ஷாநவாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி மேடையில் பேசிய ஷாநவாஸ், பிளக்ஸ் பேனரில் தனது பெயர் இடம் பெறாததை சுட்டிக்காட்டினார். இதேபோல், பிளக்ஸ் போர்டில் பெயரை போடுவதில்லை என கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி கூறினார். அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், இதுபோன்று நிகழ்வு இனி தொடராது என்று சூசகமாக குறிப்பிட்டார்.
Next Story