Ex மினிஸ்டர் விஜயபாஸ்கர் நில மோசடி விவகாரம்.. உருள போகும் முக்கிய பிரமுகர்கள் தலை

x

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய நில மோசடி வழக்கில், யுவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளி வந்துள்ளார். இதே வழக்கில், காவல் ஆய்வாளர் பிருத்விராஜ், பிரவீன், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லி என 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். வழக்கில், விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரும் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவரது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சேகர் மற்றும் அவருடன் இருந்த செல்வராஜ் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், யுவராஜ் என்பவர் மீது சார் பதிவாளர் முகமது அப்துல் காதர் பத்திரத்தை கேட்டு தன்னை மிரட்டியதாக புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட யுவராஜ், முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நில மோசடி வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்