டிரம்பின் எதிர்பாரா அறிவிப்பு - மோடி நேரில் சந்தித்ததற்கு இந்தியாவிற்கு கைமேல் பலன்
மும்பை தாக்குதல் குற்றவாளியான தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியுடன் வெள்ளிமாளிகையில் கலந்துரையாடிய அதிபர் டிரம்ப், பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மும்பை தாக்குதல் குற்றவாளியை இந்தியாவிற்கு நாடு கடத்த ஒப்புக் கொண்டுள்ள அதிபர் டிரம்ப், இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தலை ஒடுக்க இணைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு ராணுவ தளவாட விற்பனையை பல பில்லியன் டாலர்கள் உயர்த்த உள்ளதாகவும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் எரிசக்தி தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தையும் இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ள உள்ளதாகவும், இந்தியாவிற்கு F 35 ரக ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்க வழிவகை செய்துள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Next Story