மோடிக்கு பதிலடி கொடுத்த கார்கே

x

எமர்ஜென்சி குறித்த பிரதமர் மோடி விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு எதிர்காலத்தை நோக்கும்போது, உங்கள் குறைகளை மறைக்க கடந்த காலம் குறித்து பேசுகிறீர்கள் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 10 ஆண்டு காலம் 140 கோடி இந்தியர்களை நீங்கள் உணர வைத்த அறிவிக்கப்படாத எமர்ஜென்சி, ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புக்கும் ஆழமான அடியை கொடுத்துள்ளது. கட்சிகளை உடைப்பது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்களை கவிழ்ப்பது, 95 % எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறையை ஏவியது, முதல்வர்களை சிறையில் அடைப்பது எல்லாம் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இல்லையா? என கார்கே கேள்வியை எழுப்பியிருக்கிறார். பல்வேறு சம்பவங்களை பட்டியலிட்டிருக்கும் கார்கே, ஜனநாயகம் மற்றும் அரசியல்சாசனத்திற்கு பாஜக அவல நிலையைதான் ஏற்படுத்தியிருக்கிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்