இந்தியா அறிவித்த முக்கிய செய்தி.. "வங்கதேசம் வாருங்கள்.." பிரதமருக்கு வந்த உடனடி அழைப்பு | Modi
2 நாள் அரசு முறை பயணமாக டெல்லி வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை, குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு புதிய அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் ஷேக் ஹசீனாவும் சந்தித்து இருநாடுகள் இடையேயான உறவு வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதன்படி வங்கதேசத்தின் ரங்க்பூரில் புதிய தூதரகம் தொடங்கப்படும் என்றும், வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு இ-மெடிக்கல் விசா வசதியை தொடங்கப்படும் என்றும் இந்தியா அறிவித்துள்ளது. பின்னர் செய்தியாளர் சந்திப்பில், வங்கதேசம் உடனான உறவிற்கு இந்தியா அதிக முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய ஷேக் ஹசீனா, வங்கதேசத்திற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.