தமிழகத்தில் களமிறங்கும் ஓமியம் நிறுவனம்... அமெரிக்காவில் அதிரடியாக நடந்த ஒப்பந்தம்
400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், புதிய தொழிற்சாலை அமைக்கும் ஒப்பந்தத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழகத்தில் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓமியம் (Ohmium) நிறுவனத்துடன் கையெழுத்தானது. இதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் அமையவுள்ள புதிய தொழிற்சாலை மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில், தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story